வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்
வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை! உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள் சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது. இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன? ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற,…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன? போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி! ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை இது. நாம் எமது…
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்!
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்! தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக…
‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! – புருசோத்தமன் தங்கமயில்
‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! ‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், ‘கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக மிகையளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சூழல் இதுவாகும்’ என்பது. ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய மக்களாட்சி இடைவெளியைத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆக்கவழியிலான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளின் போக்கிலும், மிகையான உணர்ச்சியூட்டல்கள்…
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! – முருகவேல் சண்முகன்
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! தமிழரின் தாகம் தணிவதில்லை. அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சூழ்நிலைகளில் அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாகக் கடந்த புரட்டாசி 08, 2047 / 24.9.2016 அன்று நடைபெற்ற ‘எழுக தமிழ்’ப் பேரணி அமைந்திருந்தது. தற்காப்பு முறையில், உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் அறப் போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது இப்பேரணி. அதுவும், இப்பொழுதைய கால ஓட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான தொடக்கக் கட்டமைப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. தான் தொடங்கப்பட்ட…
‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்!
‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்! வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றக் கோரியும், தீவிரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர். ‘தமிழ் மக்கள் பேரவை’யின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரணத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் ஏற்கும் நிகராட்சி (சம ஆட்சி) முறையான தீர்வு வேண்டுமென்றும், தமிழ்த்…
யாழில் 3000 ஆயிரம் பேர்! – ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை!
யாழில் 3000 ஆயிரம் பேர்! ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை! தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது! ஈகையர் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் கிழமையில்(வார) இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. இனப்படுகொலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்குக் காரணம், தமிழர் தாயகப் பகுதிகள் தீவிரமான…