ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4 –

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 3. தாய் தந்தையர் போற்றல்-தொடர்ச்சி) எழுத்தறிவு என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது கல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு ஊர். அவருக்கு அந்த ஊரிலும் அதற்கடுத்த ஊராகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் சீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’   3. தாய் தந்தையர் போற்றல்

(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 2. தொடர்ச்சி) என் சுயசரிதை’   3. ஏழைக் குடும்பம் தொடர்ச்சி அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சிபுரம் சிரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் சிரீ ஏகாம்பரேசுவரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீசுவரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தருமகர்த்துவாக இருந்தார். அவர் சீவித காலத்தில் வருடா வருடம் காஞ்சிபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த…

ப. சம்பந்த(முதலியா) ரின் ‘என் சுயசரிதை’   2. ஏழைக் குடும்பம்

(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 1. தொடர்ச்சி) 3. ஏழைக் குடும்பம் என் தகப்பனார் அந்தக் கல்லூரியில் அரைச் சம்பளத்தில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயக்கடையில் குமாசுத்தாவாக சொல்பச் சம்பளம் பெற்று, குடும்பத்தைச் சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கட்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்தக் கல்லூரியில் படிக்கச் செய்தராம். இந்த நிலையில்தான் என் தகப்பனார் கட்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்குக் கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம்…