தமிழ்ச்சங்கங்களில் இசைஆராய்ச்சியும் நடைபெற்றது.

  வடிம்பலம்ப நின்றானும் அன்றொருகால் ஏழிசை நூற்சங்கம் இருந்தானும் கிழக்கத்திய இசை (Oriental Music) சீரிலும் சிறப்பிலும் மிக உயர்ந்தது என்றும் மிகவும் திருத்தம் பெற்றது என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கத்திய இசை என்பதில் தமிழிசை உட்படுகிறது என்பதை அறிய வேண்டும். இது ஐந்திசை, ஆறிசை, ஏழிசை என்ற முறையில் முன்னேறித் திருத்தமடைந்துள்ளதாக, அமெரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. (The Encyclopaedia Americans, Vol.19. page. 627) – முனைவர் ஏ.என். பெருமாள்: தமிழர் இசை: பக்கம்.14

தமிழர்இசையின் சிறப்பைச் சங்க நூல்கள் இயம்புகின்றன.

  காலத்தால் முந்தியும் கருத்தால் நிறைந்தும் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு எடுத்துக் காட்டியும் இலக்கியச் செம்மையில் சிறந்தும் விளங்குகின்ற சங்கப் பாடல்கள் இசைச் செய்திகளைப் பலவாறு பற்பல இடங்களில் கூறியுள்ளன. கிறித்துவுக்கு முன்னர் இரண்டும் பின்னர் இரண்டுமான நான்கு நூற்றாண்டுகளில் தமிழர் இசை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து உணரும் சிறந்த வாயில்களாகச் சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன. பண்ணும் பாடலும் பண்பட்டு வளர்ந்த நிலையை நன்குணருமாறு பல செய்திகளைச் சங்கச் செய்யுள்கள் தாங்கி மலர்ந்துள்ளன. – முனைவர் ஏ.என்.பெருமாள்: தமிழர்…

தமிழிசைச் சிறப்பு வேறு எந்த நாட்டு இசையிலும் இல்லை

 சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் தமிழிசைபற்றி அறிவித்துள்ள கருத்துகள் அளவில் இன்றைய அறிவுக்கும் மிஞ்சியதாக அமைந்திருப்பதைக் கண்டு தமிழிசையின் வாழ்வையும் வளர்ச்சியையும் கருதிக் காணலாம். இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள கருத்துகள் உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைத்துக் காணப்படாதவை. ஓசையின் அளவு, இசையமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை, ஏழிசை, இசை அலகு பெறல், பண்களின் பெயர்கள், இசையின் எண்கள் முதலியவற்றைத் தனித்தனியாக விளக்கிக் காட்டும் அளவுக்குத் தமிழிசை ஈராயிரம் ஆண்டுகளுக்கு…