தோழர் தியாகு எழுதுகிறார் 33: ஏ. எம். கே. (10)

(தோழர் தியாகு எழுதுகிறார் 32 தொடர்ச்சி) பிரிந்தவர் கூடி. . . தோழர் ஏ.எம். கோதண்டராமனின் வழிகாட்டுதலில் ஓராண்டுக் காலத்துக்கு மேல் இயக்கப் பணி ஆற்றியவன் நான். நாங்கள் பல முறை சேர்ந்து பயணம் செய்தோம் என்றால், பல கல் தொலைவு வயல் வரப்புகளில் நடந்து சென்றோம் என்று பொருள். நாங்கள் பல முறை சேர்ந்து உணவருந்தினோம் என்றால், பல நாள் சேர்ந்தே பட்டினி கிடந்தோம் என்றோ, நாலணாப் பொட்டுக் கடலையும் குவளை நீரும் பகிர்ந்து பசியாறினோம் என்றோ பொருள். இன்ப துன்பங்களில் பங்கேற்றல் என்றல்லவா சொல்வார்கள்? இங்கு துன்பங்கள்…

தோழர் தியாகு எழுதுகிறார் 31 : ஏ. எம். கே. (9)

(தோழர் தியாகு எழுதுகிறார் 30 தொடர்ச்சி) ஏ. எம். கே. (9) நாங்கள்… எங்கள்… தஞ்சையார் எனப்படும் தஞ்சை அ. இராமமூர்த்தி மாணவராய் இருந்த காலத்திலிருந்தே தமிழக அரசியல் உலகில் நன்கறியப்பட்டவர். ஆனால் வழக்கறிஞரான பிறகும் கூட சட்ட உலகில் அந்த அளவுக்கு அறியப்படாதவராகவே இருந்தார். சட்டப் படிப்பு படிக்கும் போதும் அது முடிந்த பிறகுங்கூட தஞ்சையார் அநேகமாய் முழுநேர அரசியல்வாதியாகவே செயல்பட்டு வந்தார். காமராசரின் வழிகாட்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, சென்னை தொடங்கி அடுத்தடுத்த மாவட்டத் தலைநகரங்களில் மாநாடுகள் நடத்தப்பட்ட…

தோழர் தியாகு எழுதுகிறார் 29: ஏ. எம். கே. (8)

(தோழர் தியாகு எழுதுகிறார் 28: தொடர்ச்சி) ஏ. எம். கே. (8) புதிர் முறுவல்  திருச்சி மத்தியச் சிறையில் 1974 செட்டம்பர் 25ஆம் நாள் தோழர் பாலகிருட்டிணன் தூக்கிலிடப்பட்ட போதும் அதன் பிறகும், நானும் இலெனினும் அதே சிறையின் முதன்மைக்கண்டத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்களோடு அதே கண்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ‘நக்சலைட்டு’ தோழர்களும் மற்றவர்களும் அடை பட்டிருந்தார்கள். நானும் இலெனினும் பாலுவை இழந்த பெருந்துயரிலிருந்து மீண்டு, எங்கள் அடுத்த பணிகள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். வரலாற்றுப் புகழ் படைத்த மேத் திங்கள் போராட்டத்துக்குப் பின் கொடிய அடக்குமுறையால் கலைந்து போன சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தை மறுபடியும் கட்டுவது…

தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7):  நாற்று பறித்த இராமன்

(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி)  நாற்று பறித்த இராமன் பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது. யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு —…

தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? – தொடர்ச்சி) ஏ. எம். கே. (6) மனவுறுதி சட்டத்தின் ஆட்சி என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் தன்வழிச் செல்லும் என்றும் அரசிலிருப்பவர்கள் எவ்வளவுதான் பிரமாதமாய்ப் பறைசாற்றினாலும், அரசு இயந்திரத்தின் அடக்குமுறைக் கருவிகளே சட்டத்தை மீறுகிற சந்தர்ப்பங்களில் இந்தக் கோட்பாடுகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டுச் கண்களில் கறுப்புத் துணி கட்டி விடுவார்கள். இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ஆயுதப் படையினரின் மனவுறுதி கெட்டு விடக் கூடாதாம். சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு

(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி) கடலூர் இரவு சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது. ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது…

தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4) : சட்டம் ஒன்றுதான்

(தோழர் தியாகு எழுதுகிறார் 20: காலநிலைக் களம் தொடர்ச்சி) சட்டம் ஒன்றுதான் சிறைக் கண்காணிப்பாளரையும் ஏனைய அதிகாரிகளையும் காவலர்களையும் சிறைக்கு வெளியே துரத்தியடித்த பின், ஆர்வக் குரல் எழுப்பிய கைதிகளிடையே ஏ.எம். கே.யின் எச்சரிக்கைக் குரல் ஒலித்தது. “தோழர்களே! நிதானம் வேண்டும். பகைவனிடம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவனைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது. நியாயம் நம் பக்கம்தான் உள்ளது. ஆனால், போராடித்தான் அந்த நியாயத்தை நிலைநாட்ட முடியும். நாம் இன்னும் வெற்றி பெற்று விடவில்லை என்பதை மறவாதீர்கள். பகைவனின் அடுத்த தாக்குதலுக்கு நாம் தயாராக வேண்டும்.” வெளியிலிருந்து…