பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8 தொல்காப்பி யர்மொழியை வள்ளு வர்தம் தொல்குறளை கம்பர்சொல் கவிந யத்தை உள்ளத்தை உருக்குகின்ற தேவா ரத்தை உரிமைப்பா பாரதியை தாசன் தம்மை எல்லைக்குள் இல்லாமல் ஞால மெல்லாம் எம்மொழியில் படிப்பதற்கும் இணைய மென்னும் நல்வலையுள் வளங்களுடன் நுழைந்த தாலே நற்றமிழோ உலகமொழி ஆன தின்று ! பிறமொழியின் அறிவெல்லாம் இணையத் தாலே பிறக்குமினி தமிழினிலே! உலகந் தன்னில் சிறகடிக்கும் புதுமையெல்லாம் ஒருநொ …
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்7/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 சொற்பொழிவு கேட்பதற்கும் அறிஞ ரோடு சொல்லாடல் நிகழ்த்துதற்கும் கவிஞர் தம்மின் நற்கவிதை அவர்சொல்லத் துய்ப்ப தற்கும் நாளிதழின் செய்திகளை அறிவ தற்கும் பல்வேறு விளையாட்டில் திளைப்ப தற்கும் பலநாட்டுப் பொருட்களினை வாங்கு தற்கும் அற்புதமாய் நமக்குவாய்த்த இணையம் இந்த அகிலத்தை வீட்டிற்குள் அடைத்த தின்று ! அறிவியலுக் கேற்றமொழி அல்ல வென்னும் அறிவிலிகள் கூற்றையெல்லாம் பொய்யா யாக்கி செறிவான கணிப்பொறியின் மொழியா யாகி செம்மையான …
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 கொல்லையிலே பூத்துளது என்ற போதும் கொஞ்சுமெழில் நறுமணத்தை அறிவ தற்கே முல்லைக்கும் விளம்பரங்கள் செய்யும் காலம் முத்தமிழில் உள்ளதென நமக்கு நாமே சொல்லுவதால் யாறறிந்தார் உலக மெல்லாம் சொல்லுகின்ற வகையினுக்கே வழியென் செய்தோம் வெல்லுகின்ற இலக்கியத்துக் கருத்தை யெல்லாம் வெளிச்சத்தில் கடைவிரித்தே கூவ வேண்டும் ! கணியனவன் யாதும்ஊர் என்று ரைத்த கருத்தின்று கணினிவழி வந்த திங்கே தனித்தீவாய் வாழ்ந்துவந்த மக்க ளெல்லாம் தமராக இணைகின்றார் …
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 பாலுக்குள் நெய்பதுங்கி உள்ள தன்மை பார்வைக்குத் தெரியவில்லை என்ப தாலே பாலுக்குள் உள்ளநெய்யும் பொய்யாய்ப் போமோ பாட்டிற்குள் அறிவியலின் கருத்தை யெல்லாம் மேலுக்குச் சொல்லவில்லை என்ப தாலே மேடையிலே இல்லையென்று முழங்க லாமா காலங்கள் வினைத்தொகையில் உள்ள போலே கனித்தமிழில் அறிவியலும் உள்ள துண்மை ! பொறியிலின் நுணுக்கத்தைப் பாட்டிற் குள்ளே போற்றியதைத் தெரியாமல் மறைத்து வைத்தோம் குறியீட்டில் மருத்துவத்தைச் சித்த ரெல்லாம் குறித்தளிக்கப் புதையலெனப் …
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 வான்மீதில் தெரிகின்ற மீன்கள் தம்மின் வகைசொல்லி; ஒளிர்கின்ற திசையைக் கொண்டே தேன்தமிழில் கோள்கள்தம் அசைவைச் சொல்லித் தெளிவான ஞானத்தால் கதிரைச் சுற்றி நீள்வட்டப் பால்வீதி உள்ள தென்றும் நிற்காமல் சுற்றுகின்ற விஞ்ஞா னத்தை ஆன்மீகப் போர்வையிலே சொன்ன தாலே அறிவியல்தான் தமிழ்மொழியில் இல்லை யென்றார் ! தரைதன்னில் நாளுமெங்கோ நடக்கும் எல்லாத் தகவலினைக் காட்சிகளாய் வீட்டிற் குள்ளே திரைதன்னில் காண்பதனை அறிவிய லென்றே திளைக்கின்றார் தொலைக்காட்சி …
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 கவியரங்கக்கவிதை மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லத் தீவிற்குப் பறந்து சென்றோம் குயில்மொழியாள் கண்ணகியை அழைத்துச் செல்லக் குன்றுக்கு வானஊர்தி வந்த தென்றே ‘உயில்‘போன்று நம்முன்னோர் எழுதி வைத்த உண்மைகளை அறிவியலின் அற்பு தத்தை பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம் பார்தன்னில் நனவாகக் காணு கின்றோம் ! அணுப்பிளந்த செய்திதனை ஔவை சொன்னால் அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை என்று ரைத்தார் அணுக்குண்டைப் பொக்ரானில் வெடித்த …
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தமிழ்த்தாய் வாழ்த்து கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை வணங்கு கின்றேன் ! அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே பிணியாக…