கலைச்சொல் தெளிவோம்! 97. ஒலி வெருளி-Phonophobia
97. ஒலி வெருளி-Phonophobia ஒலி (115), ஒலிக்குங்கால் (1), ஒலிக்குந்து 92), ஒலிக்கும் (19), ஒலித்த (1), ஒலித்தல் (1), ஒலித்தன்று (1), ஒலித்து (9), ஒலிந்த (2), ஒலிப்ப (29), ஒலிப்பர் (1), ஒலிபு (1), ஒலிய (1), ஒலியல் (5), ஒலிவரும் (9) என ஒலிபற்றிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குச் சில: ஓங்கு திரை ஒலி வெரீஇ, (பொருநர் ஆற்றுப்படை : 206) ஒலி முந்நீர் வரம்பு ஆக (மதுரைக் காஞ்சி : 2) கல்லென்று இரட்ட, புள்ளினம்…