தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார்
இன்று(கார்த்திகை 05, 2053 / 21.11.2022) இரவு 7.50 மணிக்கு தாமரைத்திரு, கலமாமணி, நாவரசர் ஒளவை இயற்கை எய்தினார். தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு கொண்டிருந்த பெருமதிப்பிற்குரிய அண்ணல் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நாவரசர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தனிப்பட்ட முறையிலும்இலக்குவனார் குடும்பத்தினர் சார்பாகவும் தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ், தமிழ்நாடு – புதுவை தமிழ் அமைப்புகள் ஆகியன சார்பாகவும்தெரிவிக்கிறோம். அறிஞர் ஒளவை குடும்பத்தார் தெரிவிக்கும் மறைவுச் செய்தி எந்தையும் இலமே ! ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார்…
என்னூல் திறனரங்கம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்
(சூன் 6 – தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்) “ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும்….
இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா
சித்திரை முதல் நாள், 2050 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4 இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் : ஒளவை நடராசன் சிறந்த நூல் பரிசு பெறுநர்: திரு நல்லி குப்புசாமி திரு வெ.இறையன்பு இ.ஆ.ப. சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் : திரு சி.முருகேசு பாபு சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு உலகத் திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா வள்ளுவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015 காலை 10.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’ என்ற இரு நூல்கள் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன. அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர்…