திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை
(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால். 02.இல்லற இயல் அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும், செய்யும் வாழ்வியல் உயிர்நெறி ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம், உயிரினும், ஓம்பப் படும் சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை, உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க. பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித் தேரினும், அஃதே துணை. எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே, காக்க வேண்டிய ஆக்கத்துணை. ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம், …