திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு   திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி,…