(தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது தொடர்ச்சி) ஓய்வு கொள்ள நேரமில்லை! இனிய அன்பர்களே! பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையத்தில் இருந்து எழுதுகிறேன். இங்கே தொலைபேசித் தொடர்பே திணறும் போது இணையத் தொடர்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நாள்தோறும் தாழி மடல் அனுப்புவதே போராட்டமாகத்தான் உள்ளது. இந்தத் திங்கட் கிழமை செய்தி அரசியல் நடத்த முடியாமற்போயிற்று. இன்று அறிவன் கிழமையில் ‘தமிழ்நாடு இனி’ அரசியல் வகுப்புக்கும் விடுமுறைதான்! எவ்வளவு இடர்ப்பாட்டிலும் அரசியல் வகுப்பை நிறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஏப்பிரல் 15 கந்தர்வக்கோட்டை அருகே…