புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )எவ்வகை ஓவியமாகவும்…
மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு
மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வாணாள் காப்பீட்டுக் கழகம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளி மாணவர் இராசேசு வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். வாணாள் காப்பீட்டுக்கழகம்(எல்.ஐ.சி.) சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த 3 ஆம் வகுப்பு மாணவர் பாலமுருகன், மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் கிசோர்குமார்…
நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்
நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம் புலவர் த.சுந்தரராசன் அறிவிப்பு தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை அமைக்க உள்ளது. வரும் சித்திரை முதல் வாரம் இதற்கான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொல்காப்பியம் அரங்கேறிய அவையை – தமிழ்ச்சங்கத்தை – நடத்திய வேந்தர் நிலந்தரு திருவின் பாண்டியன் படமும், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய புலவர் பனம்பாரனார் படமும் திறக்கப்பட வேண்டும் எனச் சிலையமைப்புக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, தமிழன்பர்களும் ஓவியர்களும்…
சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!
சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. நடைபெறும் இடங்கள்: 1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி [Kohana International school,Kawasaki] 2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய் [Seishinchou community…
பாவேந்தர் பள்ளியில் ஓவியப் போட்டியும் பரிசும்
பாவேந்தர் பள்ளியின் மாணவர் அணியின் சார்பில் பாவேந்தர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. இயற்கையைப் போற்றும் வகையில், குளிர்காலத்தை வரவேற்கும் நோக்கில் ‘சிற்றூர்’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 4, 5ஆம் நிலை மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். மாணவர் அணியைச் சார்ந்த த. நவீன், ந. கோபி, தருண், ஆ.பாபு போட்டியை நடத்தினர். போட்டியில் வெற்றிபெற்றோர் ச.மோ. துர்கா, தே.ரா. தினேசு, வா.சி. யாமின், வ.கு. சந்தோசு, அ.இ. மணிகண்டன் ஆகிய மாணவர்களுக்கு வெற்றிப்…