கங்கைகொண்ட சோழபுரம் மண்ணின்மைந்தர்களுக்கு வேண்டுகோள்
சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது. இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட…