புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: ஊசி முனை
புறநானூற்றுச் சிறுகதைகள் 3. ஊசி முனை அப்போது நகரத்திலே திருவிழா சமயம் விழாவின் கோலாகலமும் ஆரவாரமும் நகரெங்கும் நிறைந்து காணப் பட்டன. ஊரே அந்தத் திருவிழாவில் இரண்டறக் கலந்து ஈடுபட்டிருந்தது. ‘விழா என்றால் மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ஆனால், இந்த மகிழ்ச்சியில் தனக்கும் பங்கு வேண்டும் என்பதுபோல மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. திருவிழா ஆரவாரத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருந்தது இந்த மழை. மழையில் நனைந்து கொண்டும் விழா காண்பதற்காக நகர வீதிகளில் பொங்கி வழிந்து கொண்டிருந்தது மக்கள்…
நம் கடமை! – பாரதியார்
கடமை யாவன தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் . . . . . . . . . . . . . உலகெலாங் காக்கும் மொருவனைப் போற்றுதல் இந்நான் கே இப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும் . . . . . . நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் சிந்தையே இம்மூன்றும் செய்! – பாரதியார்