கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

களப்பிரர் காலத்தில் கட்டடக்கலை – மயிலை சீனி. வேங்கடசாமி

களப்பிரர் காலத்தில் கட்டடக்கலை – மயிலை சீனி. வேங்கடசாமி   சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய நான்கு மதங்களும் இருந்த களப்பிரர் காலத்துத் தமிழகத்தில் கட்டடக்கலை வளர்ந்திருக்க வேண்டும். இந்த மதங்களின் கோயிற் கட்டடங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அந்தக் கட்டடங்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், இரும்பு ஆகிய பொருள்களைக் கொண்டு கட்டப் பட்டவையாகையால் அவை இக்காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. கருங்கற்களை ஒன்றின் மேல் அடுக்கிக் கட்டப்படுகிற கற்றளிக் கோயில் கட்டடங்களும் பாறைகளைக் குடைந்து அமைக்கப்படும் குகைக் கோயில்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் மகேந்திரவர்மன்…

நாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு

அறிவியலுக்கு அறைகூவலிடும் நாட்டுப்புற நம்பிக்கைகளும்  சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும்   நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, முகில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு…

வரலாற்றில் விழிப்பு ! எதிர் காலத்தின் மீட்பு! – காசி விசுவநாதன்

நகரத்தார்களும் – தமிழ்ப் பெருந்தச்சர்களும்      நகரத்தார்கள் பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட அயலார் ஆட்சிக் காலங்களில் தமிழர் பண்பாடு, கலை எனத் தமிழர் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தினர். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழின் மேன்மை, தமிழர் செவ்வியல் கலைகளைக் காக்கும் பொறுப்புணர்ச்சி, அதனை வாழையடி வாழையென தமிழ் பொற்கொல்லர்கள், பெருந்தச்சர்கள்(மர வேலைப்பாடுகளுக்கும் சிற்ப வேலைப்பாடுகளுக்கும் திருநெல்வேலி தமிழ் மரபில் வந்த பெருந்தச்சர்கள் எனப்பட்ட ஆச்சாரிகள்- கைவினைஞர்கள்), இவ்வகைக் கலைஞர்களை அவர்தம் குடும்பத்துடன் பெயர்த்திக் கொண்டுவந்து செட்டி நாட்டுப்…