(தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 179 இனிய அன்பர்களே! “முள்ளிவாய்க்காலின் முழுப்பொருள்” என்ற தலைப்பில் தாழி (201) மடலில் நான் எழுதியிருந்ததற்கு ஐயா நக்கீரன் அவர்கள் செய்திருந்த கருத்துப் பதிவுகளில் தமிழ்நாட்டு எதிலியர் குறித்த கருத்திற்கான மறுமொழியை தாழி (204) மடலில் பதிந்தேன். விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்க இந்தியா சொல்லி வரும் காரணத்தை ஐயா சுட்டிக் காட்டியிருந்தார்கள். அந்தக் காரணம் பொய் என்று எழுதியிருந்தேன்.  நிலப்பறிப்பு பற்றி நான் எழுதியதும் ஐயா நக்கீரன் அவர்களின் மறுமொழியும்…