மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.
மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார். இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார்…
வலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…
வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வருமாறு : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது National Aeronautics and Space Administration என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம் / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…
கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 கணிணியியலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலேயே கலைச் சொற்களும் தலைப்பெழுத்துச் சொற்களும் எண்ணிலடங்கா அளவு கையாளப்பட்டுத் தமிழ் மொழி சிதைந்து வருவதைப் பலரும் உணரவில்லை. ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயரில் மொழிக்கொலை புரிந்து பாழ்பட்ட நிலையிலிருந்து அண்மைக் காலத்தில் மீண்டுவரும் வேளையில் ஆங்கிலக்கலப்பு விளைவிக்கும் தீங்கைப் பெரும்பான்மையர் புரிந்து கொள்ளவில்லை. பிற அறிவியல் துறைகளில் நிகழும் சொல்லாக்கத் தவறுகள்தாம் கணிணியியலிலும் நடைபெறுகின்றன. ஆனால், பிற துறைகளுடன் ஒப்பிட முடியாத அளவு கணிணியியலில்தான் ஆங்கில ஒலிபெயர்ப்புச்சொற்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவை முற்றிலும் உடனடியாகக் களையப்பட வேண்டும். சுருக்கக்…
கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு எத்துறையாயினும் அத்துறையறிவு தாய்மொழியில் வெளிப்படுத்தப் பட்டால்தான் அம்மொழியினருக்கு முழுப் பயன்பாடு கிட்டும்; அத்துறையும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். அந்த வகையில் கணிணியியலில் முழுமையும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டால்தான் கணிணியியல் முழு வளர்ச்சியடைந்ததாகும்.. இப்பொழுது அந்நிலை இன்மையால், அதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுரையாளர்களும் நூலாளர்களும் இதழாளர்களும் தமிழில் கணிணியியலை விளக்குவதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வாறு விளக்குவதில் உள்ள ஆர்வம் தமிழைப் பயன்படுத்துவதில் இல்லை. கணிணிக் கலைச்சொற்களாக நல்ல தமிழ்ச் சொற்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்தாதவர்களும் உளர்; தமிழ்க்…