கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்-இலக்குவனார் திருவள்ளுவன்
கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம் எல்லார்க்கும் எல்லா நிலைகளிலும் எல்லாப்பணிகளிலும் கணிப்பொறி என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, கணிப்பொறி பயன்பாடு சார்ந்த அறிவியலறிவு நமக்குத் தேவை. தொன்மை வாய்ந்த தமிழ் மொழி புத்திளமையுடன் திகழக் கணிப்பொறி பயன்பாடு தேவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கணிப்பொறிப் பயன்பாட்டைத் தமிழில் அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தவும் கூடிய கணித்தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர்களில் குறிப்பிடத்தக்கவராகப் பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் உள்ளார். பேரா. ந. தெய்வசுந்தரம் பயன்பாட்டு நிலைகளிலும் ஆய்வு நிலைகளிலும கணியன்களை(softwares) உருவாக்கித் தமிழுலகம் பயனுற உழைக்கிறார். அ)…