சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! – கண்ணன் நாகராசு
சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! கண்ணன் நாகராசு
எமது படையணி விரைகிறது… எம் தேசத்தை மீட்க! – மேதகு வே.பிரபாகரன்
ஈழம் மீட்க அணிவகுத்துள்ளோம்! நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது!…