பொதுப்பணித்துறைக் குளங்கள் ஆக்கிரமிப்பு
தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலத்தில் வருகின்ற நீரைத் தேக்கவிடாமல் தடுத்து வெளியேற்றுகின்றனர். இதனால் கோடைக் காலத்திற்கு முன்பே குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவை நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையில் மத்துவார்குளம் என்ற கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் கடைகள், பைஞ்சுதை(cement) தொட்டிகள் கட்டும் தொழிற்சாலைகள் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழையால் பெருகிய தண்ணீர்…
தேனிப் பகுதியில் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் குளத்தைத் திறந்துவிடும் அவலம்
தேனிப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவற்றில் இயற்கையாகப் பெய்த மழையாலும் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை போன்றவை திறக்கப்பட்டமையாலும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இப்போது ஒவ்வோர் ஊராட்சியிலும் குளங்களில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். மீன்கள் வெளியே சென்றுவிடாமல் தடுக்க இரவு பகலாகக் குளங்களில் காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் குளம் முற்றிலும் நிரம்பிய பிறகுதான் உழவிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால் சில ஊராட்சித்தலைவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, இரவோடு இரவாக மீன் வளர்ப்பதற்காகக் குளங்களைத் திறந்துவிடுகின்றனர்….