திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால், காதலியின் கண்கள் துடித்தல். (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய், தாம்காட்ட யாம்கண் டது. தீராத்துயர் ஆக்கிய கண்களே! நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப் பைதல் உழப்ப(து) எவன்? விளைவை ஆராயாமல் கண்டகண்,…