பிரதிலிபியின் கதைப்போட்டி ‘ஒரே ஓர் ஊரில்’ – 2016/17
வாசகர்களுக்கு வணக்கம், பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ‘ஒரே ஒரு ஊர்ல’ – 2016/17 இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் திசம்பர் – சனவரியில் கதைகளுக்கான இந்தச் சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனைக் கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என…