தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி தலைதூக்கும் அவலம்

 கந்துவட்டி தலைதூக்கும் அவலம்   தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி மீண்டும் தலைதூக்குவதால் பல குடும்பங்கள் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன.   தமிழக முதல்வர்அவர்கள் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மீளவேண்டும் என நினைத்து அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி கந்துவட்டி, கடப்பாரை வட்டி, அலகு(மீட்டர்)வட்டி,   ஓட்ட(இரன்)வட்டி எனப் பலகோரமுகங்கள் செயல் இழந்தன. அதன்பின்னர் மீண்டும் கந்துவட்டி ஆசாமிகள் தங்கள் கோரமுகத்தைக் காட்டி 100க்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வட்டி வாங்கி வட்டிக்கு வாங்கியவர்களின் வீடு, நிலம் போன்றவற்றைப்பறிக்கின்றனர்.   சில கந்துவட்டி…

செயமங்கலம் பகுதியில் தலைவிரித்தாடும் கந்து வட்டிக்கொடுமை

  தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கந்துவட்டிக்கொடுமையால் பல குடும்பத்தினர் ஊரை விட்டு இரவோடு இரவாகக் காலிசெய்து வருகின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் முதன்மைத் தொழிலாக விளங்குவது வெற்றிலைக் கொடிக்காலும், வாழைப் பயிரிடலும்தான். இப்பகுதியில் உள்ள உழவர்கள் வெற்றிலைகளைப் பயிரிட்டுத் தமிழகம் முழுமையும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 வருடங்களாகப் போதியமழையின்மையால் உழவர்களால் உழவைத் தொடரமுடியவில்லை. ஒரு சில உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி உழவைக் காப்பாற்றி வந்தனர். இருப்பினும் தாங்கள் வாங்கிய கடனுக்காக முதலைத் தராமல்…

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி- காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் தேவதானப்பட்டிப் பகுதியில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் ஆண்கள் தன்னுதவிக்குழு, பெண்கள் தன்னுதவிக்குழு என்ற பெயரில் அரசின் ஏற்பு   பெறாமல் 10 முதல் 20பேர்வரை சேர்ந்து பணத்தைச் சேர்த்து வட்டிக்கு விடுகின்றனர். இவ்வாறு குழுக்களாகச் சேர்ந்து பணம் கட்டுபவர்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அரசின் விதிமுறையை மீறி 100க்கு 5 % முதல் 10 % வரை வட்டியை முதலில்…

கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு!

கந்துவட்டியாளர்களுக்கு  அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு   தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.   அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…

தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை – தற்கொலை அவலம்

  தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை-பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் அவலம் தேனிமாவட்டத்தில் கந்துவட்டிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேவதானப்பட்டி வேளாண்மை செழித்த பூமியாகும். மேலும் இதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், கெங்குவார்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளும் வேளாண்மை நிறைந்த பூமியாகும். இப்பகுதியில் வாழை, நெல், தென்னை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களை உழவர்கள் பயிரிட்டு வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய மழையில்லாததால் சோலைவனமாக இருந்த இப்பகுதி பாலைவனமாக மாறியது. இதனால் உழவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன்கள் வாங்கியும் தங்கள் நகைகளை அடமானம் வைத்தும் உழவுத்தொழில் பார்த்து…