இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி தமிழிலிருந்து தோன்றியது மலையாளம் என்ற உண்மை கிழக்குத் திசையை உணர்த்த அது (மலையாளம்) ஆளும் சொல்லினாலேயே (படி ஞாயிறு) விளக்கப்பெறும். 1 தமிழிலிருந்து பிறந்த மலையாளம் வேறுபட்டதற்குரிய காரணங்கள் : 2 1. சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியுடன் மிகுதியான தொடர்பு கொள்ளாதிருந்தமை. 2. 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை. …
தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்
(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5. செம்மை சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ் …
துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது – மயிலை சீனி. வேங்கடசாமி
துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது கன்னட நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடுகளைப் போலவே துளு நாடும் திராவிட நாட்டைச் சேர்ந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளைப் போலவே துளு மொழியும் திராவிட இன மொழியாகும். அசோகப் பேரரசரின் சாசனங்களிலே கூறப்படுகிற சத்தியபுத்திர நாடு என்பது துளுநாடே என்பதை முன்னமே கூறி யுள்ளோம். சங்கக் காலத்திலே துளு நாட்டில் வழங்கி வந்த மொழி தமிழ் என்பதையும் துளு நாட்டு அரசர் தமிழ்ப் புலவரை…
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக் குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா? உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது. விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர். செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…