திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகம் இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராசு, நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா வழக்கறிஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து பங்கேற்க உள்ளனர்.
அரிக்கமேடு – ஓர் ஆவணம் : தாழி இதழியல் கருத்தரங்கம்
எமது நிறுவனத்தின் சார்பாக பல அரிய வரலாற்று, கலை, மொழியியல், பண்பாட்டு மீட்டுருவாக்க முயற்சியில் தொடர்ந்து எம்மை ஈடுபடுத்தி வருகின்றோம். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத் தூய பேதுரு மேனிலைப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் கல்விச் சுற்றுலா, புதுவையில் எமது நிறுவனம் சார்பாக நடைபெற்றது; புதுச்சேரி வரலாற்றில் “அரிக்கமேடு – ஓர் ஆவணம்” என்ற தலைப்பில் புதுவை நகரில் அமைந்துள்ள தாழி இதழியல் அலுவலகத்தில் கருத்தரங்க நிகழ்வும் நடைபெற்றது. இந்தத் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கென எமது நிறுவனத்தால் நடத்தப்படும் நான்காம் கருத்தரங்கம் இதுவாகும்….
வெள்ளாளர் கல்வி விழா!
கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா! 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் ‘தங்க விருது’ பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் ‘வெள்ளாளர் கல்வி விழா’, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை வரும் மே 31ஆம் நாள் மாலை 4 மணிக்கு நகர்கோவில், வடசேரியில் உள்ள இலெட்சுமி மகாலில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு, சான்றுரை வழக்குரைஞர் திரு. என். சிதம்பரதாணு…