‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 4/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 3/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூல் திறனாய்வுக் கட்டுரை 4/4 13.1.0.0.அவ்ஆய்வு முடிவுகள் – 6:                இவை நூலாசிரியன் ஆய்வு முடிவுகள்: 13.1.1.0.பழமையில் பெரும்பற்றுக் கொண்ட கன்பூசியசின் நோக்கிலிருந்து, வள்ளுவர் பெரிதும் வேறுபடுகிறார். [பக்.27]. 13.1.1.1. பழையன என்பதாலேயே அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் – போற்ற வேண்டும் என்னும்  உணர்வோ புதியன என்பதாலேயே அவற்றை ஏற்கக் கூடாது என் னும்  உணர்வோ வள்ளுவரிடம் சிறிதும் இல்லை. பழையன வாயினும்…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 3/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 2/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூலாய்வு  3/4 8.0.0.0.ஆய்வுப் போக்கு:             ஓர் ஆய்வு / ஒப்பாய்வு நூலின் உள்ளடக்க ஆய்வுத் தலைப் புகள், உட்தலைப்புகள், இவ்விரண்டிற்கும் எண்ணிடல், பத்திகள் பிரிப்பு போன்றவை சிறப்புற அமைதல் வேண்டும். இவற்றிற்கு எல்லாம் ஒப்பாய்வுச் சான்று நூலாக இந்நூல் இலங்குகிறது. 8.2.0.0.உள்ளிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரைக்கும் வரிசை               எண் வழங்கல், 8.2.0.0.ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்து நிறைவுக்குத் தக்கபடி               உட்தலைப்புகள் அமைத்தல், அவற்றிற்கு எண்ணிடல்,…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 2/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 1/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு  2/4 4.3.0.0.கன்பூசியசின் (இ)லூன்யூவும் திருவள்ளுவரது திருக்குறளும்: 4.3.1.0. கன்பூசியசின் (இ)லூன்–யூ:             சீனாவின் மறை நூலகிய (இ)லூன் யூ, உரை நடையில் அமைந்த நூல். இதில் 20 இயல்கள், 499 முதுமொழிகள் உள்ளன.             இவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை; 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை; 43 முதுமொழிகள் பிறர் உரைத்தவை.    4.3.2.0.திருவள்ளுவரது திருக்குறள்:    [பரிமேலழகர் வைப்பு முறை]              3…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு – வெ.அரங்கராசன்

முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு 1/4 1.0.0.0.நுழைவாயில்: 1-8-1973 முதல் 30-6-2008 வரை [34 ஆண்டுகள், 10 திங்கள்கள் 29 நாள்கள்–மொத்தம் 12477 நாள்கள்] சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் இருக்கையில், போற்றுதலுக்கு உரிய பெரும் பணி ஆற்றியவர் திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள். அப்போது “ஆய்வே வாழ்வு; வாழ்வே ஆய்வு” என்னும்  பே ராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி அவர்களின் ஆய்வியல் கோட் பாட்டை அகத்தில் ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல்  சாய்வும் ஓய்வும் இன்றித்…