கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்

கம்பன் கழகம், காரைக்குடி    தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி வருகின்ற  புரட்டாசி 11,2045 / 27.09.2014 சனிகிழமை மாலை 6.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபதில் நடைபெற உள்ளது . தலமை : திரு.பள்ளத்தூர் பழ. பழனியப்பன் (தலைவர், கம்பன் கழகம்) சொற்பொழிவு : திருமதி.வெற்றிச்செல்வி – பொருள் :சுந்தரன் போற்றும் சுந்தரன் (தலைமை ஆசிரியை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆவடி) தமிழ் சுடர் விருது பெறுபவர்: பேராசிரியை : முனைவர்:ம.வே.பசுபதி மேனாள் முதல்வர், திருப்பனந்தாள் கலை அறிவியல் கல்லூரி, திருப்பனந்தாள் பொருள் :…

கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள்

  ஆடி 25, 2045 / ஆக. 08, 2014 காலை கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பேரன் கலைமகன் அவர்களின் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கியது. தரவு : முனைவர் மறைமலை இலக்குவனார்