வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 – இராம.கி.
வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3 2/3 இக்கதையை 2 மாற்றங்களோடு நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருவிளையாடற் புராணங்கள் பயிலும். (இப்புராணங்கள் அமைப்பிலும் கதைவிவரிப்பிலும் முரண்படும். இராமாயணத்தில் எத்தனையோ வேற்றங்கள் – versions – உண்டல்லவா? அவைபோல இவற்றைக் கொள்ளலாம்.) திருவிளையாடற்புராணங்களில் மடைப்பள்ளி கிணறாகவும், மணம்நடத்திவைத்தது சம்பந்தரென்றும் ஏரணத்தால் முரணாகும். 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் மணம் நடத்தியிருந்தால் அவரையே புகார்ப்பெண் சான்றாக்கியிருக்கலாமே? சொல்லவில்லையே? சம்பந்தர் ஞானப்பால் குடித்தது 3 வயதிலெனில், அவர் வரலாற்றைப் பார்க்கையில், புறம்பியம் போனது 7/8 வயதெனலாம். அவ்வயதில் மங்கைக்கு அவர் மணம் நடத்திவைத்திருப்பாராவென்பது…
அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் -தீர்வுகளும் : கரிகால்வளவன்
அந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் தீர்வுகளும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம் தமிழினமாகும். 4 நூறாயிரம் மக்கள் தொகையில் 80,000 பேர் தமிழர்களாவர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரு காலத்தில் வளர்பிறையாகக் கொடிகட்டிப் பறந்த நம் தமிழருக்கு இன்று தேய்பிறையாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழகத்தில்உள்ளது போல இங்குத் தமிழுணர்வு மங்கிப் போய்ச் சாதிய உணர்வு மேலோங்கியது. வரலாறு படைத்தவன் தமிழன் தீவில் 1940-50களில் உண்மையான உள்ளூர்வாசிகள், சிறைக்கைதிகள், ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டவர்கள் தீவைவிட்டுப் பூர்வீக மாநிலங்களுக்கும்,…