இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு
இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர் வாழ்வில் இனி்மை இல்லை! ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை…
தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகள் – துயரீட்டுத்தொகை வழங்குக!
தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகளால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதி அருகே உள்ள ஊர், தே.வாடிப்பட்டி. இப்பகுதியில் நெல், கரும்பு ஆகிய பயிரிடல் முதன்மை உழவாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மஞ்சள் ஆறு நீரை நம்பி உழவுத்தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள பயிர்த்தொழிலைக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது தண்ணீர்…