தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) 5. ஞாலப் போராளி தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய பேராசிரியரே ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப் போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41 தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம். இக்கவிதை…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40 சின்னச்சாமி 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39 ஏனைய பாடல்கள் தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர், செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 : ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 நெடுஞ்செழியன் 1965 ஆம் ஆண்டு சனவரி 26 முதல் இந்தி மொழி, இந்தியாவின் பொது மொழியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியது. அதனால் தமிழ்நாட்டில் இந்திமொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் ஒன்று 1964 செட்டம்பர் மாதம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று மீண்ட அவரைக் கவிஞர் வரவேற்று வாழ்த்துகிறார். செந்தமிழைக் காப்பதற்காக இந்தி மொழியின் ஆதிக்கத்தை…
“கருமவீரர் காமராசர்” கட்டுரைப் போட்டி – வல்லமை
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கருமவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும். இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்….