ஒளவையார்:2 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 11 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய்…
கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு
குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள் தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…
இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு
இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர் வாழ்வில் இனி்மை இல்லை! ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை…