காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி
காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் 01/08/18. நினைவில் கொள்ள வேண்டிய சிறந்த மனிதர்! வீரியமிக்க தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், காவிரிக் காப்புக்குழுத் தலைவர் தோழர் பூ.அர.குப்புசாமி. ‘பி.ஆர்.கே.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பூலம்பாளையம் அரங்கசாமி குப்புசாமி அவர்கள் ஆடி 17, 1964 தி.பி. / 1.08.1933 ஆம் நாளில் பிறந்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர் மானிடவியல் ஆய்வில் பட்டயமும் பெற்றவராவார். பூ.அர.கு. தமது 12ஆவது அகவையிலேயே அவரது தமையனார் முயற்சியால்…
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக் குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா? உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது. விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர். செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…
செங்கொடியூர் சென்று வந்தேன்! நீங்கள்….தமிழ் இராசேந்திரன்
தமிழ் உணர்வாளர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய தமிழ்க் கோயில்….. தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து 6 புதுக்கல் தொலைவில் உள்ள , நேர்மை மிகு ஆட்சிப் பணியாளர் உ.சகாயம் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள, ஒரே சமையல் , ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து பெருங்கூட்டுக் குடும்பமாக வாழுகிற, பொது உடைமை வாழ்வு (Community Life) என்ற அடிப்படையில் இயங்குகிற, திருமணத்தை மற்றவர் நலனுக்காகப் புறக்கணித்து, முதிர் கன்னியாக, ஈக வாழ்வு நடத்தும் மகேசு என்ற நேர்மையின் இலக்கணமாக…
உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது. இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக…
நினைவேந்தல்கள் – பெ.மணியரசன் & கரூர் இராசேந்திரன்
&
நூற்றாண்டு காணும் நீதிப்பேரரசர் வி.ஆர். கிருட்டிண(ய்ய)ர் நீடு வாழ்க!
கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்
கரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது. கவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்
அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக, இயேசுகிறித்துவின் கொள்கைப் பரப்புரைப்பணியாற்ற தமிழகம் வந்து, கொஞ்சம் இறைப்பணியும், மிகுதியும் தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் சீகன் பால்கு (ஐயர்) தங்கியிருந்த தரங்கம்பாடிக்கும் சென்று…