seyaraman chitra01  karur rasenthiran padam03

அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார்.

karur rasenthiran padam01 மேலும் பயணத்தின் ஒரு  பகுதியாக, இயேசுகிறித்துவின் கொள்கைப் பரப்புரைப்பணியாற்ற தமிழகம் வந்து, கொஞ்சம் இறைப்பணியும்,  மிகுதியும் தமிழ்ப் பணியும் ஆற்றிய  அறிஞர் சீகன் பால்கு (ஐயர்) தங்கியிருந்த தரங்கம்பாடிக்கும் சென்று பார்வையிட்டு வந்தார். தமிழுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வரும் கரூர் இராசேந்திரன் அவர்களும் அவருக்கு இப்பயணத்தில் உற்றுழி உதவிய திருவாளர்கள் படைப்பாளர் செயராமன் – சித்ரா ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள்.

இவர்களின் தமிழ்த்தேசியப் பணி தொடரட்டும்! karur rasenthiran padam04

– செய்தியாளர், கரூர்