திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி   திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால்  15.கற்பு இயல்   120. தனிப்படர் மிகுதி   பிரிந்து  தனித்து  இருக்கும்    தலைவியிடம்  படரும்  மிகுதுயர்   (01-10 தலைவி சொல்லியவை)                    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே       காமத்துக் காழ்இல் கனி. காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல், விதைகள் இல்லாச் சுவைப்பழம்.   வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு       வீழ்வார்…

திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்    திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  பசப்புஉறு பருவரல்   பிரிந்த தலைவி, தன்உடலின் நிறமாற்றம் கண்டும், வருந்துதல்.   (01-10 தலைவி சொல்லியவை)         நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன்       பண்புயார்க்(கு) உரைக்கோ பிற? பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன்?   அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என்       மேனிமேல் ஊரும்…

திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால்  15.கற்பு இயல்  கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால், காதலியின் கண்கள் துடித்தல்.   (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,       தாம்காட்ட யாம்கண் டது.         தீராத்துயர் ஆக்கிய கண்களே!         நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்       பைதல் உழப்ப(து) எவன்?         விளைவை ஆராயாமல் கண்டகண்,…

திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை   தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல்   படர் மெலிந்து இரங்கல் தலைவனது பிரிவுத் துயரால், தலைவி மெலிந்து வருந்துதல். (01-10 தலைவி சொல்லியவை) மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை, இறைப்பவர்க்(கு),       ஊற்றுநீர் போல மிகும். பிரிவுத் துயரத்தை மறைத்தாலும், இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல் மிகுமே! கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்(கு)       உரைத்தலும், நாணுத் தரும். மறைக்கவும், முடிய வில்லை; நோய்செய்தாரிடம் கூறவும், வெட்கம். காமமும், நாணும், உயிர்காவாத்…

திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால்  15.கற்பு இயல்   பிரிவு ஆற்றாமை                             தலைவனது பிரிவைத் தாங்காது. தலைவி வருத்ததை வெளியிடல்              (01-10 தலைவி சொல்லியவை) செல்லாமை உண்டேல், எனக்(கு)உரை; மற்றுநின்       வல்வரவு, வாழ்வார்க்(கு) உரை. பிரியாமை உண்டேல் சொல்லு; பிரிவதை வாழ்வாரிடம் சொல்லு,   இன்கண் உடைத்(து),அவர் பார்வல்; பிரி(வு)அஞ்சும்       புன்கண் உடைத்(து)ஆல், புணர்வு. அவர்பார்வை, இனிது; நீள்கூடலோ, பிரிவு அச்சம் தருகிறது.   அரி(து)அரோ…