கலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
வெள்ளிசை(Karoeke) முறையில் தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் – புவனேசுவரி கணேசன்
வெள்ளிசை (Karoeke) தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை…