ஆளுமையர் உரை 83 & 84 : என்னூலரங்கம்: கலைகள்- இணைய அரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம் மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் முனைவர் இரா.மதிவாணன் உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் தொடர்ந்து முற்பகல் 11.00 …
தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும்மொழியும் 32: பிறநாட்டார்ஆட்சிக்காலம் – தொடர்ச்சி) 9. மக்களாட்சிக் காலம் ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து…
தமிழ்நாடும் மொழியும் 32: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி மைசூர் மன்னர்கள் மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய…
தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை…
தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள்…
தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி) 7. பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுகள் பல 13-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை…
தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 27: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 28: 7. பிற்காலப் பாண்டியர் வரலாறு பாண்டியரைப் பற்றிக் கூறுவனவற்றுள் காலத்தால் முந்தியன மெகசுதனீசர் எழுதிய இந்திகா , சாணக்கியனின் அருத்தசாத்திரம், அசோகனின் கல்வெட்டுகள் என்பனவாம். பாண்டியர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஆண்டார்கள். பாண்டிய நாடு பருத்திக்கும் முத்துக்கும் பெயர்பெற்ற நாடாகும். பிளினி பாண்டிய நாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். கி. மு. 40-லிருந்து கி. மு. 30 வரை ஈழ நாட்டைப் பாண்டியன் ஆண்டதாக…
தமிழ்நாடும் மொழியும் 27: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 26 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 27 சோழர் காலத் தமிழகம் தொடர்ச்சி சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டன. இராசராசன், அவன் அரசி உலகமாதேவி இவர்களது செப்புப் பிரதிமை உருவங்களைத் தஞ்சாவூர் பெரிய கோவிலில் செய்துவைத்த செய்தியை அக்கோவில் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று திருக்காளத்திக் கோவிலில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனது உருவச்சிலை செப்பினால் ஆயது. இவனது மற்றொரு கற்சிலை உருவம் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் காணப்படுகிறது. சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ உருவங்களும், மனிதன், பறவை முதலிய இயற்கை…
தமிழ்நாடும் மொழியும் 26: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 25 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 26 சோழர் காலத் தமிழகம் அரசன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய, ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக் காலமாகும். இக் காலத்தினைத் தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறுதல் வேண்டும். தெலுங்கு நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது எனக் கூறலாம். மேலும் சாவா, சுமத்திரா, ஈழம் முதலிய தீவகங்களிலும் சோழர் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்ததைப் பல வரலாற்றாசிரியர்கள் பலபடப் பாராட்டியிருப்பது நாமறிந்ததொன்றே. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டை ஆண்ட…
தமிழ்நாடும் மொழியும் 25: சோழர் கால ஆட்சி முறை – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 24 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 25 சோழர் கால ஆட்சி முறை தொடர்ச்சி அளவைகள் இங்கிலாந்திலே வில்லியம் என்ற பேரரசன் தன் நாட்டை அளப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே சோழ மன்னர்கள் தங்கள் நாட்டு விளைநிலங்களை நேர்மையான முறையிலே அளந்து பதிவும் செய்தார்கள். நிலங்கள் வேலி முறையில் கணக்கிடப்பட்டன. தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களிலே இன்றும் குழி அல்லது வேலிக் கணக்கிலேயே நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு வேலி என்பது இக்காலத்தில் 63 ஏக்கருக்குச் சமமாகும். நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் சீபாதம்…
தமிழ்நாடும் மொழியும் 24: சோழர் கால ஆட்சி முறை – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 23 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 24 சோழர் கால ஆட்சி முறை சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை…
தமிழ்நாடும் மொழியும் 23: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 22 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 23 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் – இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும். முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல…