சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019
தை 26, 2050 2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 / 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம், நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 22, 2048 / பிப்பிரவரி மாதம் 4ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி,பண்பாடு,வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அனைவரும்…
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016
அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்…
கரூரில் தமிழக அரசு சார்பில் ஓவியக்காட்சி
தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில் மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது. வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு ஓவியக்காட்சியைத்…