karur-art-exhibition-big01

தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில்  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது.

வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது.

ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு  ஓவியக்காட்சியைத் திறந்து வைத்துப் பேசினார்.  சுழற் சங்கத் தலைவர் சேதுபதி, சிறப்பாசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் இராமபாசுகர், கரூர் மாவட்ட நுண்கலை மன்ற மாவட்டத் தலைவர் இரவிச்சந்திரன், பகுதிநேர ஓவிய ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஓவியர் சத்தியசீலன் நன்றியுரை கூறினார்.

இந்த ஓவியக்காட்சியில், தமிழ்ப் பண்பாடு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைக் காட்சிகள் குறித்த 60-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

கண்கவர் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.