அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள மல்லனம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட அழகாபுரி, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கும் அகழ்களங்களால் (கல்குவாரிகளால்) பாதிப்படைந்த மக்கள் மண்டை ஓட்டை வைத்து அகழ்களங்களை முற்றுகையிட்டனர். மல்லனம்பட்டி ஊராட்சியில் 3 அகழ்களங்களும், கல் உடைப்பான்களும் இயங்குகின்றன.. உரிமை நிலங்களை விலைக்கு வாங்கி அகழ்களங்களை இயக்கிவருகிறார்கள். இப்பகுதி வேளாண்மை செழித்த பகுதியாகும். மேலும் நிலக்கோட்டை பூச் சந்தைக்கு 50 % பூக்களை இப்பகுதியில் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20…