திண்டுக்கல் மாவட்டத்தில் அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள மல்லனம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட அழகாபுரி, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கும் அகழ்களங்களால் (கல்குவாரிகளால்) பாதிப்படைந்த மக்கள் மண்டை ஓட்டை வைத்து அகழ்களங்களை முற்றுகையிட்டனர். மல்லனம்பட்டி ஊராட்சியில் 3 அகழ்களங்களும், கல் உடைப்பான்களும் இயங்குகின்றன.. உரிமை நிலங்களை விலைக்கு வாங்கி அகழ்களங்களை இயக்கிவருகிறார்கள். இப்பகுதி வேளாண்மை செழித்த பகுதியாகும். மேலும் நிலக்கோட்டை பூச் சந்தைக்கு 50 % பூக்களை இப்பகுதியில் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20…