(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல் – தொடர்ச்சி) 6. கல்லறை காண் காதை நிலவும் உடுவும் மாலைப் பொழுதில் மேலைத் திசையில் சிலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப் பரிதி சென்றனன் இரவெனும் ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட   5 நீல வான நெடுந்திரை தன்னில் கோல வட்டம் குறித்தனன், அதனை ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது; துதலிற் புரளும் சுருள்குழல் வரைய 10 நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன்     களங்கப்…