திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை. உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும் கள்காதல் கொண்(டு)ஒழுகு வார். கள்ளைக் காதலிப்பார் எப்போதும் அஞ்சப்படார்; புகழையும் இழப்பார். உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம் மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க. ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…