நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்
அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும் மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…
வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு – வைகை அனிசு
வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள்…