வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 – முனைவர். ப. பானுமதி
(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 தொடர்ச்சி) 2 ஈழத் தமிழர்களின் மரணம் இவரது மனத்தைப் பல்லாயிரச்சுக்கலாக உடைத்துப் போட்டுள்ளது. அந்த உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாகக் கண்ணீர் சிந்துகின்றன. மரணம் பேசியதைப் போலவே இவரது கவிதைகளில் மயான பூமியும் பேசுகிறது. மனிதனின் மரணத்தைத் தன் மடியில் தாங்குவது மயானம். அம்மயானமே, மனித எச்சங்களெல்லாம் மக்கிப் போனவுடன் தூது அனுப்புகிறேன் அதுவரை உங்கள் துப்பாக்கி முனையை குத்தகைக்கு விடுங்கள் குருவிகள் கூடு கட்டி குடும்பம் நடத்தட்டும் ! என்று…
வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 – முனைவர். ப. பானுமதி
வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! கவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின், பெருமை பேசுவதோ, சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த, விவேகம் நிறைந்த, எழுச்சி மிகுந்த கருத்தால் சிறுமையைக் களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தைக், குறிப்பாக இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக் கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்….