பெரியாரைப் படி! உரிமையைப் பிடி! – கவிஞர் கண்மதியன்
இளைய சமூகமே! பெரியாரைப் படி! எரிமலையாய் எழுந்துன் உரிமையைப் பிடி! காற்றும் மழையும் புயலும் – இங்கே காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் – ஒன்றே புத்தியில் கொண்ட தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’ இம்மண் கண்ட மானுட ஏக்கம்! கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார்! விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்! மேற்கிலோர்…