நீ உயர - கவிஞர் சீனி நைனா முகமது
நீ உயர உயரத் துடிக்கிறாய் உரிய வழியெது உனக்குத் தெரியுமா தம்பி – கொஞ்சம் உட்கார்ந்து முதலில் சிந்தி உயர்வுத் தாழ்வுக்கோர் உண்மைக் காரணம் உள்ளத்தில் இருக்குது தம்பி – அதை ஒழுங்கு படுத்துநீ முந்தி வெள்ளத்தின் அளவே தாமரை மலருமே வெருங்குளமானால் அழியும் – புது வெள்ளத்தில் மீண்டும் தழையும் உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்கை உன்வச மாகிடும் உலகம் – இதை உணரத் திருக்குறள் உதவும் நல்லதை நினைத்து நல்லதை உரைத்தால் நல்லவை வந்துனை சேரும் – நீ நடந்தால் வாழ்த்துகள்…