வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு இலக்கிய விருது
வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு சிறந்த ஐக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான புதினம், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு,உரிய படைப்பாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் தலைக்கு உரூ.5000/- பணமுடிப்பும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டன. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேசு. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளராகவும் உள்ள கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ …