சீறிப் பாய்வேன் தமிழாலே! காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும் – என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை – நான் வீணாய் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும் கூர்மை வாளாய் க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும்…