புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி
தென்னாடு விட்டேகித் தீவாந் தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக் குலத்தவராம். கோடரி மண்வெட்டி – கலப்பை குந்தாலி ஏந்துவோரே நாடெலாம் ஆளுகின்ற – உண்மை நாயக ராவாரையா! பாழ் நிலத்தையெல்லாம் – திருத்திப் பண்படுத்தி மக்கள் வாழ் நிலமாகத் – தமிழர் மாற்றிய தாரறியார்? இலங்கை சிங்கபுரம் – பிசிமுதல் இன்னும் பலவான தலங்களின்…
தமிழ்மக்கள் ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்! – கவிமணி தேசிகவிநாயகம்
என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி, ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; – அன்றெனில், மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய தானம்போம், யாவும்போம், தாழ்ந்து. பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும் மண்டை யுடைத்து வருந்துவதேன்? – அண்டும்இக் காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு. வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்; காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் – பேணிநம் சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்; சிந்தை மகிழ்ந்து தினம். தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்; செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் – ஐயமின்றி எவ்வெவ் வறமும்…
வாய்ப்பு வந்தால் முன்னேற்றமும் வரும்! – கவிமணி
அமிழ்ந்துறையும் மணிகள் ஆழ்கடலின் கீழெவர்க்கும் அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள் அமிழ்ந்துறையும், அம்மா! பாழ்நிலத்தில் வீணாகப் பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள் பரிமளிக்கும், அம்மா! கடல் சூழ்ந்த உலகுபுகழ் காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர் கணக்கில்லை, அம்மா! இடமகன்ற போர்முனைதான் ஈதென்னக் காணா திறக்கின்ற வில்விசயர் எத்தனைபேர், அம்மா! (வேறு) தக்க திறனிருந்தும் – நல்ல தருணம் வாய்த்திலதேல், மிக்க புகழெய்தி – மக்கள் மேன்மை அடையாரம்மா!…
தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி
வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்; வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)