4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 கால நதியின் கதியதினில்கடவுள் ஆணை காண்பீரேல்ஞால மீது சுகமெல்லாம்நாளும் அடைந்து வாழ்வீரே! என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார். ‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார். கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும் கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின்…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்குஇன்னார் இனியாரும் உண்டோ அம்மா? மாற்றம் உலகின் இயற்கையென–இங்குமாந்தரும் கண்டு தெளிந்திடவோ,போற்றும் இறைவன் இம் மாமதியம்–விண்ணில்பூத்து கிலவ விதித்தனனே! என்ற பாடல்களில் சிறந்த கருத்தும், கூனக் கிழவி நிலவினிலே–ராட்டில்கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே–காந்திமாமதி யோங்கி வளருதம்மா! என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம். காட்சி இன்பம் ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள்….
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5 தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5
(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3 – சி. பா. தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5 மனிதன் வாழ்க்கையில் பெறும் பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர், “பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற” (குறள். 70) என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும்….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….
இறைவனை எங்கும் கண்டிலனே – கவிமணி
தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித் தேரோடும் வீதி கண்டேன் எய்ப்பில் வைப்பா மவனைத் – தோழி ஏழை நான் கண்டிலனே சிற்பச் சிலைகள் கண்டேன் – நல்ல சித்திர வேலை கண்டேன் அற்புத மூர்த்தி யினைத் – தோழி அங்கெங்குங் கண்டிலனே பொன்னும் மணியுங் கண்டேன் – வாசம் பொங்கு பூ மாலை கண்டேன் என்னப்பன் எம்பி ரானைத் – தோழி இன்னும் யான் கண்டிலனே தூப மிடுதல் கண்டேன் – தீபம் சுற்றி எடுத்தல் கண்டேன் ஆபத்தில் காப்பவனைத் – தோழி…
தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி
நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…
தமிழுக்குத் தலைவணங்கிய மலையாளம்..! – கவிமணி
எழுத்தாளனின் எழுத்துகளே வருங்கால மன்பதைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றன. தரமான முற்போக்கான எழுத்துகள் மூலம் இந்த மன்பதையைச் சமன் செய்வது நல்ல எழுத்தளார்கள் கையில்தான் இருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் என்றால் பெரும் படிப்பறிவும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த மன்பதையைப்படித்து, அதனைத் திருத்தும் வகையில் எழுதும் இரண்டு கட்டுரைகள் போதும் ஒருவன் எழுத்தாளனாக ஏற்கப்படுவதற்கு! ஆனால், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, எழுத்தாளுமை உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள்….
ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி
ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும் வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம். கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக் கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ? கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம் பல்லவி பாடிப் பயன்…