தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை”
(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி) “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” இனிய அன்பர்களே! இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்? அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என…
சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்
சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்: “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்” யார் இந்தச் சேதுப்பிள்ளை? “தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் பங்குனி 20,…
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு
வைகாசி 13, 2048 சனிக்கிழமை 27-05-2017 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு “கவியோகி சுத்தானந்த பாரதி” உரையாற்றுபவர் : திரு. புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசலின் 26 ஆவது நிகழ்வு “புத்தகங்கள் வெளியிட எளிய வழி” உரையாற்றுபவர் : திரு சிரீகுமார் அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in
கலக்கமில்லா இலக்குவனார் – கவியோகி சுத்தானந்த பாரதியார்
அலக்கண் வரினும் கலக்கமின்றி செந்தமிழ்க் கொடியை முந்துறத் தாங்கி தன்மானத்தைப் பொன்னெனக் காத்த நுண்மாண் புலவர்; நூல்பல பயின்று நன்மாணவரை நன்கு பயிற்றி வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் உள்ளத் துடிப்பெலாம் நந்தமிழ் வாழ்கென நடக்கும் புரவலர் இலக்குவனாரின் இலக்கணச சிறப்பும் தனித்தமிழ்க் கொஞ்சும் இனித்த நடையும் நிமிர்ந்த வீறும் அமைந்த சீரும் எண்ணிஎண்ணி ஏத்திடுவோமே! – கவியோகி சுத்தானந்த பாரதியார்
தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்
தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார் கல்வித்துறையில் இருந்து போராட்டப் பாதையில் நடைபோட்டுத் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் தமிழ்ப்புரட்சியாளர் பேராசிரியர் இலக்குவனார். இவ்வாரத்தில் பேராசிரியர் இலக்குவனாரின் நினைவுநாளான செப்.3 வருவதால் (கார்த்திகை 01, தி.பி.1940/17.11.1909 – ஆவணி 18, தி.பி.2004 / 03.09.1973) அவரை நினைவுகூரும் வகையில் சில படைப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. இதழ்கள், மலர்கள், நூல்கள் முதலானவற்றில் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார்பற்றி வந்துள்ள கவிதைகள், கட்டுரைகள், கட்டுரைகளின் பகுதிகள் தரப்பட்டுள்ளன. வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் எனக் கவியோகி…
தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்
“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்” . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்
தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்
தமிழ் இனிதோங்குக! தமிழ் உலகாளுக! தமிழிசை முரசம் தாவி விண்ணெழுகவே! தமிழ்மொழி உலகத்தாய் மொழியாகுக! தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்
தமிழர் தனியுரிமை
தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்
தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்